search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா மினி கிளினிக்"

    அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    அ.தி.மு.க ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பது வரு மாறு:-

    சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர்க் பலகை வைத்ததோடு அந்த பெயர்ப் பலகையில் தற்போதைய முதல் அமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளி வந்துள்ளது.

    இது தொடர்பாக புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெயர்ப் பலகையை மாற்றவோ, பெயர்ப் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    அரசு ஆணை இல்லாமல், அந்தத்துறை தொடர்புடைய அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

    அரசாங்க அலுவலகத்தில் உள்ள பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள்.

    மேற்படி இடத்தில், ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பலகை முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அம்மாவின் திருவுருவப் படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    எனவே முதல் அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் ஜெயலலிதா திருவுருவப்படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை எடப்பாடி பழனிசாமி காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
    சென்னை :

    சென்னை திருவொற்றியூர் எண்ணூரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 38 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி ஏறத்தாழ 72 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு பட்டியல் தயாரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நடந்த 9 மெகா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரத்து 883 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 97.5 சதவிகிதம் உயிர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 4-வது அலை, 5-வது அலை என்று வந்தாலும் உயிரிழப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

    அம்மா மினி கிளினிக்

    அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் 2 ஆயிரம் இடங்களில் தொடங்கப்படும் என்று முடிவெடுத்து 1,700 இடங்களில் நிறுவினார்கள். இவர்களுடைய நோக்கம் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதுதான். ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பதோ, மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதோ நோக்கம் கிடையாது. 1,700 அம்மா மினி கிளினிக்குகளில், 1,700 டாக்டர்களை தற்காலிகமாக நியமித்தார்கள். ஆனால் அதில் ஒரு மினி கிளினிக்கில் கூட ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை.

    அம்மா மினி கிளினிக்குகளில் நியமித்த டாக்டர்களை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பழிவாங்கவில்லை. மாறாக அவர்களை கொரோனா பணிக்கு பயன்படுத்தினார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை எடப்பாடி பழனிசாமி காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்கள், டயாலிசிஸ், பிசியோதெரபி போன்ற நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை மற்றும் மருத்துவம் பார்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 41 லட்சத்து 42 ஆயிரத்து 843 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருக்கிறார்கள். டெங்குவினால் 4 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 541 பேர் மட்டும்தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 2017-ம் ஆண்டு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.பி.சங்கர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×